தற்போது, விஜய் நடித்து வரும் லியோ படத்தை தொடர்ந்து, அவர் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்க உள்ளார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், நேற்று ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeThalapathy 68 [File Image]
இந்த படத்தை ஏஜிஎஸ் பட நிறுவனம் சார்பில் கல் பாத்தி அகோரம் தயாரிக்க, இந்த படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசைய மைக்கிறார். இப்படத்திற்கான தலைப்பு அறிவிப்புடன் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
unknown nodeThalapathy68 [Image source : twitter/ @senthil18701]
இந்நிலையில், தளபதி 68 படத்தின் அறிவிப்பை அடுத்து, சென்னையில் நடந்த விழா ஒன்றில் கேக் வெட்டி கொண்டாடினார் இயக்குனர் வெங்கட்பிரபு. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeThalapathyVijay68[Image Source : V4UMEDIA]
நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த படத்தை முடித்ததும் வெங்கட் பிரபு படத்தில் இணைகிறார்.
unknown node