அதிர வைக்கும் அனிருத் இசை! மிரட்டலாக வெளியான லியோ படத்தின் "Badass" பாடல்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன், பிரியா

LeoSecondSingle

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா பெரிய அளவில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் என ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில், இசை வெளியீட்டு விழா நடைபெறாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தனர்.

இசை வெளியீட்டு விழா நடைபெறாத காரணத்தால் படத்தின் இரண்டாவது பாடலும் சில நாட்களுக்கு பிறகு தான் வெளியாகும் எனவும் சோகத்துடன் ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால், ரசிகர்களின் சோகத்தை போக்கும் வகையில், லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான படாஸ் எனும் பாடல்  இன்று 6 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் வரும் அனிருத்தின் இசை காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது என்றே கூறலாம். ஏற்கனவே படத்தில் இருந்து முதல் பாடலான நா ரெடி தான் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இதனைதொடர்ந்த, தற்போது இரண்டாவது பாடலும் தற்போது வெளியாகியுள்ள காரணத்தால் இந்த பாடலும் மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு ஹிட் ஆக கூடிய வகையில் அனிருத் பாடலை படத்திற்காக கொடுத்திருக்கிறார். மேலும். லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கும் ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node