கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
unknown nodeViduthalai bo [Image Source : Twitter]
இந்த திரைபடத்தில் கெளதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
unknown nodeVIDUTHALAI 2 [Image Source : Twitter]
படம் வெளியாகி 1 வாரங்கள் கடந்தும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் படம் தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
unknown nodeviduthalai vijay sethupathi [Image Source : Twitter]
அதன்படி, விடுதலை திரைப்படம் உலகம் முழுவதும் 38 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.