பணம் உலகை காலி பண்ணிடும்...'பிச்சைக்காரன் 2′ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட விஜய் ஆண்டனி.!

பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது. இந்த இரண்டாவது பாகத்தை இசையமைப்பாளரும்,

பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது. இந்த இரண்டாவது பாகத்தை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தானே இயக்கி தானே நடித்து வருகிறார்.

unknown node

pichaikkaran 2 [Image Source : Twitter]

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் மலேசியாவில் உள்ள கடற்கரையில் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

unknown node

Pichaikkaran2 [Image Source : Twitter]

இதனால் பிச்சைக்காரன் படத்தின் வேலைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து விஜய் ஆண்டனி தனது  வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதற்கிடையில் இன்று காலை பிச்சைக்காரன் 2 படத்தின் புதிய அப்டேட் ஒன்று 5-மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

unknown node

அதன்படி, தற்போது அந்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் 1-வது 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரெய்லர்  நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது ட்வீட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளார்.

பணம் உலகை காலி பண்ணிடும்...'பிச்சைக்காரன் 2′ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட விஜய் ஆண்டனி.!