விஜய்யுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்...தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் விஜய் நடித்து வரும் 'தளபதி 67" படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த நிலையில், படத்தின் தயாரிப்பு

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் விஜய் நடித்து வரும் ‘தளபதி 67″ படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு படத்தின் அப்டேட் இன்று மாலை 6.7 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தது.

unknown node

Thalapathy67 update at 6 07PM [Image Source : Twitter]

அதன்படி, தற்போது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ‘தளபதி 67’  திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் எனவும் அறிவித்துள்ளனர்.

unknown nodeunknown node

விக்ரம் எனும் மெகாஹிட் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜயின் 67-வது திரைப்படத்தை இயக்கி வருவதால் இந்த படத்தை பார்க்க இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது என்றே கூறலாம். ஏற்கனவே இவர்களுடைய கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2-வது முறையாக லோகேஷ் – விஜய் கூட்டணி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.