தமிழ்நாடு CM-ஆன தளபதி விஜய்.! ரசிகர்களின் போஸ்டரால் உருவான சர்ச்சை.!

தளபதி விஜய் தற்போது பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக

தளபதி-64 படத்துக்கு மாஸ்டர் என்று டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிட்டது.

விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் CM of Tamilnadu என குறிப்பிட்டுள்ள அவர்கள், CM என்றால் Collection Master என்று விளக்கமும் கொடுத்துள்ளனர்.

தளபதி விஜய் தற்போது பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, ஆன்ட்ரியா, கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று, முடிவடைந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், விஜய் சேதுபதி அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கு மாஸ்டர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிட்டது. பின்னர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் புதிய சாதனை படைத்தது. வெளியான முதல் 24 மணி நேரத்தில் இந்திய அளவில் அதிக #ஹேஷ் டேக்குகளில் டிரெண்டிங் செய்யப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை மாஸ்டர் திரைப்படம் பெற்றது.

unknown node

விஜய் ரசிகர்கள் அவர்களது சந்தோசத்தை  வெளிபாடாக தமிழகத்தின் CM விஜய் என்று தென் சென்னை மாவட்டம் தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சிலர் ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் CM of Tamilnadu என குறிப்பிட்டுள்ள அவர்கள், CM என்றால் Collection Master என்று விளக்கமும் கொடுத்துள்ளனர்.