Vijay : விஜய் அவர் பணத்தையே கொடுத்து சம்பளத்தை 100 கோடியா உயர்த்திக்கிட்டாரு! பிரபல நடிகர் பளிச்!

நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபகாலமாகவே விஜய்யை தாழ்த்தியும் விஜய்க்கு எதிராகவும் பேசி வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு லியோ படத்தின் வசூல் ஜெயிலர் படத்தை தொடாது அப்படி ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படத்தின் வசூல் முறியடித்தால் என்னுடைய மீசையை எடுத்துக்கொள்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது அதனை தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்க்கு யாரும் கோடி கோடியா சம்பளம் கொடுக்க முன்வரல எனவும் அவர் பணத்தையே கொடுத்து அவர் சம்பளத்தை 100 கோடியா உயர்த்திக்கிட்டாரு எனவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” விஜய் முதன் முதலாக 70 கோடி சம்பளம் வாங்கியது புலி திரைப்படத்தில் தான் அந்த திரைப்படத்தை தயாரித்தவர் செல்வகுமார் என்பவர் .அந்த செல்வகுமார் வேற யாரும் இல்லை விஜய் உடைய பிஆர்ஓ. அந்த பி.ஆர்.ஓக்கு அவ்வளவு பணம் எப்படி வந்திருக்கும்?
அது அனைத்தும் விஜய் உடைய பணம் தான் அவர் பணத்திலேயே அவருக்கு 70 கோடி சம்பளம் என்று சொல்லி விடுகிறார்கள் இதன் மூலம் அவருடைய மார்க்கெட்டும் உயர்கிறது. பிறகு அவருடைய மாமா ஒருவர் வந்தார் அதாவது மாஸ்டர் திரைப்படத்தை நான் சொல்கிறேன். மாஸ்டர் படத்தை தயாரித்த பிரிட்டோ விஜயின் மாமனார். அதுவும் விஜய்யுடய பணம் தான்.
எனவே, இப்படி ஒவ்வொரு படத்திற்கும் விஜய் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என ரசிகர்களே கிளப்பி விடுகிறார்கள். விஜய் அவர் பணத்தையே கொடுத்து அவர் சம்பளத்தை 100 கோடியா உயர்த்திக்கிட்டாரு” எனவும் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இப்படி தொடர்ச்சியாக விஜய்யை பற்றி மீசை ராஜேந்திரன் கூறி வருவது ரசிகர்களுக்கு மேலும், மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.