தல உட்பட அனைத்து நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்து விஜய் அவர்கள் சாதனை படைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம்மாஸ்டர்.இந்தபடத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான்.
தற்போது இவரது பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். கடந்த மாதமே அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள். ஆம் தளபதியின் பிறந்தநாளை கொண்டாட காமன்டிபி, ஹேஷ்டேக் என உருவாக்கி பெரும் எதிர்பார்ப்பில் தயாராகிவருகின்றனர்.அந்தவகையில் நேற்றைய தினம் விஜய்யின் பிறந்தநாளுக்கான காமன் டிபியை #THALAPATHYBdayFestCDP என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி 20க்கும் மேற்பட்ட பிரபலங்களால் வெளியிடப்பட்டது. சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த காமன் டிபி தற்போது வரை 5.3 மில்லியன் வரை டூவிட்களை பெற்று இதுவரை யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளது. ஆம் தலயின் பிறந்தநாளுக்கு வெளியான காமன் டிபி4.6மில்லியன் டூவிட்களையும், ஜூனியர் என்டிஆர் அவர்களின் பிறந்தநாள் சிடிபி5.2மில்லியன் டூவிட்களையும் பெற்றிருந்தது. தற்போது அவை அனைத்தையும் முறியடித்து தளபதி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதனை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.