விஜயகாந்தின் மாநகர காவல் பட இயக்குனர் எம்.தியாகராஜன் காலமானார் ....!

Vijayakanth's Metropolitan Police Director M. Thiyakarajan has passed away in Chennai.

விஜயகாந்தின் மாநகர காவல் பட இயக்குனர் எம்.தியாகராஜன் சென்னையில் காலமாகியுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனராக இருந்தவர் தான் தியாகராஜன். நடிகர் பிரபுவின் வெற்றி மேல் வெற்றி, விஜயகாந்த்தின் மாநகர காவல் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். ரசிகர்களின் விருப்பத்துக்குரிய இயக்குனராக இருந்த இவர் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். இதுவரை இவர் இயக்கிய பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் போற்றக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் தியாகராஜன் அவர்கள் இன்று அதிகாலை சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள பிளாட்பாரத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். பின்பதாக தகவல் அறிந்து வந்த சென்னை மாநகர காவல்துறையினர் ஆம்புலன்சை வரவழைத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு தியாகராஜனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரபல இயக்குனர் தியாகராஜன் அவர்களது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.