ஆக்ரோஷமான சண்டை காட்சிகளுடன் சியான் 60..!!

The climax of the Sion 60 movie is reported to be a fight between Vikram and Dhruv Vikram.

சியான் 60 படத்தின் கிளைமாக்ஸ் காட்சி விக்ரமும் துருவ் விக்ரமும் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சி தான் என்று தகவல்.

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் நடிகர் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் சியான் 60. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றுகிறார். மேலும் இந்த படத்தில் நடிகை சிம்ரன், வாணி போஜன், சனந்த் ரெட்டி , முத்துக்குமார் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை முதலில் எடுக்காமல் முதலிலே படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளாராம். ஆம் இந்த கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரமும் துருவ் விக்ரமும் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சி தான் படமாக்க பட்டு வருகிறதாம். இதனால் தற்போது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்றே கூறலாம். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.