தமிழ் சினிமாவில் எல்லா கதாபாத்திரங்களில் நடித்து கலக்ககூடியவர் நடிகர் விக்ரம். இவர் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
unknown nodeஅந்த வகையில், அவருக்கு பிறந்த நாள் தெரிவிக்கும் வகையில் அவர் தற்போது நடித்து வரும் “தங்கலான்” படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோகிரீன் வெளியிட்டுள்ளது. வீடியோவில் ” விக்ரம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்.
unknown nodeபடத்திற்காக எந்த அளவிற்கு படக்குழு கடினமாக உழைத்துள்ளார்கள் என்பது இந்த மேக்கிங் வீடியோவில் தெரிகிறது. எனவே, படம் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் பேசப்படும் என தெரிகிறது” இந்த “தங்கலான்” திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
unknown nodeமேலும் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.