வசூலில் தெறிக்கவிடும் வீரன்...10 நாட்களில் இத்தனை கோடிகளா..?

நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடந்த ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வீரன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில்

Veeran Box Office

நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடந்த ஜுன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வீரன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும், நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஆர்க் சரவன் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு மரகதநாணயம் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் வினய் ராய், அதிரா ராஜ், முனிஷ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அந்த வகையில் படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இந்த திரைப்படம் வெளியான 10 நாட்களில்  உலகம் முழுவதும் 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.