நடிகர் விஷால் வீரமே வாகை சூடும் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் “லத்தி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
unknown nodeஇப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. விஷால் போலீஸாக நடித்துவரும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeஇந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது. இதனை தொடர்ந்து தற்போது படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்த நிலையில், இப் படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது நடிகர் விஷாலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு காட்டிற்குள் சண்டைக்கட்சியை படமாக எடுக்கப்படும் போது விஷால் சுருண்டு விழுவது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Exclusive Video from sets of #Laththi
Actor @VishalKOfficial got INJURED Again in the Sets of #Laththi during yesterday’s shoot.#Vishal got a leg injury during shoot of final fight sequence happening at chennai.@RanaProduction0 @actorramanaa@nandaa_actor @johnsoncinepro pic.twitter.com/vM1xEun6KP
— sʀɪᴅʜᴀʀ… (@Priyank96092012) July 5, 2022