நடிகர்விஷால்தற்போதுசுந்தர்.சிஇயக்கத்தில்ஆக்சன்எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில்தமன்னாஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டு படப்பிடிப்புகள் முடிந்து சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
unknown nodeஇந்த படத்தை அடுத்ததுஇரும்புத்திரை-2திரைப்படத்தில் விஷால் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் இரும்புத்திரை-2 திரைப்படத்தின் கதைக்களத்தில் இன்னும் வேலை செய்து விட்டு வருமாறு இயக்குனரிடம் கூறி அனுப்பிவிட்டாராம். ஆதலால், மிஸ்கின் இயக்கத்தில் ஏற்கனவே வெளியானதுப்பறிவாளன்படத்தின் அடுத்த பாகத்தில் விஷால் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வேலைகளில் இயக்குனர்மிஷ்கின்தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஆக்சன்படத்தை முடித்து விஷால்துப்பறிவாளன்இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா? அல்லதுஇரும்புத்திரைபடத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா? அது இல்லாமல்அரிமா நம்பி, இருமுகன்ஆகிய படங்களை இயக்கியஆனந்த் சங்கர்இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறாரா என்பது தற்போது குழப்பமாக உள்ளது. விரைவில் இது பற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.