வடசென்னை 2 எப்போது.? மனம் திறந்து பேசிய தனுஷ்.!

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த படத்தில் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ்,

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த படத்தில் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், பாலாஜி, சுப்பிரமணியம் சிவா, ராதாரவி, டேனியல் பாலாஜி, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

unknown node

அதிரடி கேங் ஸ்டார் படமாக உருவாகியிருந்த இந்த படம் ரசிங்கர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

unknown node

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என பல ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தனுஷும், வெற்றிமாறனும் பல படங்களில் பிசியாக இருப்பதால் வடசென்னை 2 நடப்பது சந்தகேம் தான் என்கிற அளவிற்கு செய்திகள் பரவி கொண்டு இருக்கிறது.

unknown node

இந்த நிலையில், சமீபத்தில் வடசென்னை 2 குறித்து தனுஷ் பேசியுள்ளார் “இது தொடர்பாக பேசிய தனுஷ் ” வடசென்னை 2 ஏற்கனவே கிட்டத்தட்ட 50 நிமிடங்களுக்கான காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு வெற்றிமாறன் சிறு இடைவெளி வேண்டும் என்பதற்காக அந்த படத்தை நிறுத்தி வைத்துள்ளார்.

unknown node

தற்போது அவர் அடுத்தடுத்த பல படங்களில் பிசியாக இருக்கிறார். வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அவர் வடசென்னை 2 எடுப்பார். எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.