வெறித்தனம்…’தளபதி 67′ அப்டேட் எப்போ..? படத்தில் இணைந்த பிரபலங்கள்.! முழு விவரம் இதோ..

Default Image

வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் அடுத்ததாக தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Thalapathy 67 Poojai Done
Thalapathy 67 Poojai Done [Image Source: Twitter ]

படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர்.

Gautham Vasudev Menon And Mansoor Ali Khan In Thalapathy 67 Movie
Gautham Vasudev Menon And Mansoor Ali Khan In Thalapathy 67 Movie [Image Source: Twitter ]

இந்த நிலையில், தற்போது தளபதி 67 படத்தில் சில பிரபலங்கள் தான் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அவர்கள் யார் யார் என்றால், ஒருவர் நடிகர் மன்சூர் அலிகான், ஒருவர் இயக்குனர் கெளதம் மேனன். இருவருமே தளபதி 67 படத்தில் நடிப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி படுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்களேன்- விரைவில் ‘7 ஜி ரெயின்போ காலனி 2’.! தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் தகவல்.!

Thalapathy 67
Thalapathy 67 [Image Source: Twitter ]

மேலும் தளபதி 67 திரைப்படம் 100% லோகேஷ் கனகராஜ் படமாக எடுக்கப்படவுள்ளதாகவும், ஏற்கனவே படத்தின் 2 பாடல்கள் தயார் செய்து முடித்துவிட்டதாகவும் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj [Image Source: Twitter ]

மேலும், படத்தில் ரத்ன குமார் வசனம் எழுதுவதாகவும், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்ற சூப்பர் அப்டேட்டையும் கொடுத்துள்ளார்.  இந்த அப்டேட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் தரமான சம்பவம் காத்திருக்கிறது. என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
India whitewash Bangladesh
NZWvsSLW
Kavarapettai Train accident
Mohammad Shami
Chief pilot Ikrom Rifatli Fami Zainal - co-pilot Maitri Shithole
Rishabh Pant