இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படம் யாருடன் தெரியுமா..??

Director Lokesh Kanagaraj is reportedly planning to direct a film with Telugu actor Mahesh Babu next

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படம் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் மாநகரம் , கைதி, மாஸ்டர் என மூன்று வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் . ராஜ் கமல்  நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடித்துவிட்டு படத்தை தீபாவளி அன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த நடிகரை வைத்து படம் இயக்குவார் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்டது.

மேலும் தற்போது அதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படம் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விக்ரம் படம் வெளியான பிறகு வெளியாகும் என்றும் சமூக வலைத்தளத்தில் செய்திகள் வைரலாகி வருகிறது.