Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ், F1 படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க கோலிவுட் நடிகர் அஜித் விருப்பம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு வருகிறார். தற்போது நடிகர் அஜித் குமார் தலைமையிலான அஜித்குமார் ரேசிங் அணி, பிரான்ஸில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளது.
அஜித் குமார் இந்தப் பந்தயத்தில் ஓட்டுநராகவும், அணியின் உரிமையாளராகவும் பங்கேற்கிறார். முன்னதாக, 2025 ஜனவரியில் துபாயில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் (24H Series) அவரது அணி 992 போர்ஷே பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. அதேபோல், இத்தாலியில் நடந்த 12 மணி நேர முகெல்லோ சர்க்யூட் பந்தயத்திலும் மூன்றாவது இடத்தைப் பெற்று பாராட்டுகளைப் பெற்றது.
மேலும், பிரான்ஸில் அவரது அணி பெல்ஜியத்தில் நடந்த GT4 பந்தயத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தியது. அஜித் குமார் தனது அணியுடன் தொடர்ந்து சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். இப்பொழுது, பிரான்ஸில் L Michelin 12H Paul Ricard ரேஸ்ல அஜித் கலந்து கொண்டுள்ளார். இதையொட்டி போட்டி தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்ட போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் பிராட் பிட் நடிப்பில் F1 என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், பிராட் பிட் F1-ல் நடித்ததுபோல, நீங்கள் இந்தியாவிற்காக 24H சீரிஸில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ரேஸரும் நடிகருமான அஜித், “Fast and Furious Sequel 4 F1 L அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க எனக்கு விருப்பம் உள்ளது. ”பொதுவாகவே என் படங்களில் நிறைய ஸ்டண்ட் காட்சிகள் செய்வேன்… ஆகவே படக்குழுவினர் என்னை அழைத்தால், Why not?” என்று கூறியுள்ளார்.