விஜய்யை வைத்து மீண்டும் திரைப்படம் தயாரிப்பீர்களா?ஆர்.பி.சௌத்ரியின் அதிரடி பதில்.!

Asked by RP Chaudhary if he would make a film with Vijay again, he replied that he will definitely act.

விஜய்யை வைத்து மீண்டும் திரைப்படம் தயாரிப்பீர்களா? என்று ஆர்.பி.சௌத்ரியிடம் கேட்டதற்கு கண்டிப்பாக நடிப்பார் என்று பதிலளித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.அதனை தொடர்ந்து அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65-வது படத்தினை நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் விஜய்யின் திரைப்பயண வாழ்க்கையில் பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட பல படங்களை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடித்துள்ளதும் ,அதில் வெற்றி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.கடைசியாக நடிகர் விஜய் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜில்லா படத்தில் நடித்ததும் ,அது பிளாக் பஸ்டர் ஹிட்டானதும் குறிப்பிடத்தக்கது.இந்த சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நேற்றைய தினம் ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் படத்தினை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.சௌத்ரியிடம் விஜய்யை வைத்து மீண்டும் திரைப்படம் தயாரிப்பீர்களா? என்று கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு விஜய் ஏற்கனவே எங்களது தயாரிப்பில் 6 படங்களில் நடித்துள்ளார் எனவும் , கண்டிப்பாக இனியும் நடிப்பார் என்றும் கூறியுள்ளார்.அதனுடன் முன்பெல்லாம் கதைக்கு ஏற்ற ஹீரோவாக விஜய் நடித்தார் .ஆனால் இன்று அவரது ரசிகர்களுக்குப் பிடித்தது போல அவருக்காக ஒரு கதையைத் தேடி தயார் செய்து அதில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .