பத்துதல படத்திற்கு வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சிம்பு பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. வீடியோவில் பேசிய சிம்பு ” அனைவர்க்கும் வணக்கம் பத்து தல திரைப்படம் வரும் 30-ஆம் தேதி வெளியாகிறது.
unknown nodeஇந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கு எனவும் பெரிய ஓபனிங் இருக்குனும் சொல்றாங்க. ஆனால், இதற்கு காரணம் நான் இல்லை. என்னுடைய நடிப்பில் வெளியான முந்தைய படங்கள் வெற்றி பெற்றதால் தான் இது நடக்கிறது என்பது இல்லை. இதற்கு எல்லாம் ஒரே காரணம் நீங்க கொடுத்த ஆதரவு மட்டும் தான்.
unknown nodeSilambarasan TR [Image Source: Google ]
உங்களுக்கு நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது, ரொம்ப ரொம்ப நன்றி. படத்தை திரையங்கிற்கு வந்து பார்த்து கொண்டாடுங்க, கண்டிப்பாக உங்களுடைய குடும்பத்தோடு வாங்க. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. இயக்குநர் கிருஷ்ணா மிக சிறப்பாக படத்தை இயக்கியிருக்கிறார். அதைப்போல ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட இசை மற்றும் பீஜியம் பற்றி நான் சொல்வ வேண்டியதில்லை.
unknown nodeSilambarasan TR [Image Source : Google ]
இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று எல்லாம் வல்லஇறைவனை வேண்டிக்கிறேன். உங்களோட அன்பும், ஆதரவும் எனக்கு கண்டிப்பாக என்றும் தேவை, நீங்க இல்லாம நான் இல்லை’ என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.