நடிகை சமந்தா நடிப்பில் இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “யசோதா”. இந்த திரைப்படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார்.
unknown nodeYashoda Trailer [Image Source: Twitter }
தமிழ், தெலுங்கு. கன்னடம், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நவம்பர் 11 தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான டிரைலர் இன்று வெளியாகும் என காலையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
unknown nodeYashoda Trailer [Image Source: Twitter }
இந்த அறிவிப்பை தொடர்ந்து, “யசோதா” படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் சமந்தா வரும் ஓவ்வொரு காட்சிகள் மற்றும் மணி சர்மாவின் பின்னணி இசை காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. குறிப்பாக டிரைலரில் வரும் சமந்தாவின் சண்டை காட்சிகள் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. ட்ரைலரை வைத்து பார்க்கையில் சமந்தா படத்தில் வாடகை தாயாக நடித்துள்ளார் என்பது தெரிகிறது. மேலும் வரலட்சுமி மிரட்டலான வில்லி வேடத்தில் நடித்துள்ளார்.
Hearty wishes to @Samanthaprabhu2 and team #Yashoda all the best! https://t.co/4ja9dvnSix@SrideviMovieOff
@harishankaroffl@hareeshnarayan @SakthiFilmFctry— Suriya Sivakumar (@Suriya_offl) October 27, 2022
இந்த டிரைலரை தமிழ் மொழியில் பிரபல நடிகரான சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதால், படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் காத்துள்ளனர். படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பையும் ட்ரைலரையும் வைத்து பார்க்கையில் சமந்தாவிற்கு மிகப்பெரிய ஹிட் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.