அருண் விஜய் நடிக்கும் படத்தில் காமெடி நடிகராக யோகிபாபு..?

It has been reported that actor Yogi Babu will play the role of a comedian in the film directed by Hari and starring Arun Vijay.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்திற்கு காமெடி நடிகராக நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது.

நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார்.அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.இந்த நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகும் அவரது 33-வது படத்தில் காமெடி நடிகராக யோகிபாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அருண் விஜய் நடிக்கும் படத்தில் காமெடி நடிகராக யோகிபாபு..?