பல ஹீரோக்களுக்கு நீங்க லக்கி! அந்த நடிகையை புகழ்ந்து பேசிய சிம்ரன்!

சென்னை : சிம்ரனை தான் பல நடிகைகள் புகழ்ந்து பேசி பார்த்து இருக்கிறோம். அப்படி பட்ட சிம்ரனே நடிகை ஒருவரை புகழ்ந்து பேசி இருக்கிறார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் பிரியா ஆனந்தை தான் புகழ்ந்து பேசியுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து பிரசாந்தின் 50-வது திரைப்படமான அந்தகன் படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன்கள் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அப்படி தான் சென்னையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சிம்ரன் பிரியா ஆனந்தை புகழ்ந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” எனக்கு சமீப காலமாக பிடித்த நடிகைகளில் பிரியா ஆனந்த் ஒருவர். அவர் மிகவும் அழகான ஒரு நடிகை. மிகவும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்த கூடிய நடிகை. பல நடிகர்களுடைய படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படங்கள் வெற்றியையும் பெற்று தந்திருக்கிறது. பல ஹீரோக்களுக்கு லக்கியாக இருந்துள்ளார்.
எப்போதுமே மிகவும் பாசிட்டிவான ஒரு எண்ணம் கொண்டு ஓடி கொண்டு இருப்பார். படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போடாமல் கூட மிகவும் அழகாக இருப்பார். ஒரு விஷயம் மனதில் பட்டது என்றால் அந்த விஷயத்தை வெளிய சொல்லவே தயங்கமாட்டார்.மனதிற்குள் ஒன்று வைத்துக்கொண்டு வெளிய வேறு விதமாக பேசும் பழக்கம் அவர் கிட்ட கொஞ்சம் கூட கிடையாது.
எல்லாரும் எப்போதும் நலமாக இருக்கவேண்டும் என்று நினைக்க கூடிய ஒருவர். அவருடன் படப்பிடிப்பு தளத்தில் நேரத்தை செலவிட்டதை மறக்கவே முடியாது” எனவும் நடிகை சிம்ரன் பிரியா ஆனந்தை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025