மோஷன் போஸ்டர் தயார்... வலிமை அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா...!

Composer Yuvan says the motion poster for the movie Strength is ready.

வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாக இசையமைப்பாளர் யுவன் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை .இதனால் தல ரசிகர்கள் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர். விரைவில் வலிமை அப்டேட் வெளிவரும் என்று காத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வெளியாகியுள்ளது. ஆம். வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாக இசையமைப்பாளர் யுவன் தெரிவித்துள்ளார்.

unknown node