கொல்கத்தா அணிக்கு பெருத்த அடி.. பந்துவீச்சாளர் காயம்

ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே இரண்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்களான ஷிவம் மாவி மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி இருவரும் காயம் காரணமாக ஆடுவது இயலாது என ஆகியது.

கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியார் மற்றும் கர்நாடகா வீரர் கரியப்பா இருவரையும் எடுத்தது

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக என்னால் கொல்கத்தா அணிக்கு திரும்ப இயலவில்லை. இதனால், அணியில் இருந்து விலகுகிறேன்

ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே இரண்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்களான ஷிவம் மாவி மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி இருவரும் காயம் காரணமாக ஆடுவது இயலாது என ஆகியது.

இதற்கு பதிலாக, கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியார் மற்றும் கர்நாடகா வீரர் கரியப்பா இருவரையும் எடுத்தது. இவர்கள் இருவரும் ரஞ்சி மற்றும் சையத் முஸ்தக் அலி போட்டியில் சிறப்பாக செயல்பட்டவர்கள்.

இந்நிலையில், தற்போது மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.

தென்னாப்ரிக்கவை சேர்ந்த அன்ரிக் நாட்ஜ் தான் அவர். இந்த தகவலை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் அவர் வெளியிட்டார். அவர் கூறியதாவது, “தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக என்னால் கொல்கத்தா அணிக்கு திரும்ப இயலவில்லை. இதனால், அணியில் இருந்து விலகுகிறேன்” என தெரிவித்தார்.