ஐபிஎல் ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு தயாரா.? இன்னும் சில மணி நேரத்தில் அட்டவணை ரிலீஸ்....!

இந்த ஆண்டு (2023) ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், ஐபிஎல் 2023- க்கான போட்டி நடைபெறும்

இந்த ஆண்டு (2023) ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், ஐபிஎல் 2023- க்கான போட்டி நடைபெறும் தேதி குறித்த அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

unknown node

2023 Indian Premier League [Image Source : Google ]

மேலும், இந்த அட்டவணையை பிரபல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. எனவே ஐபிஎல் பார்க்கும் ரசிகர்களுக்கு மத்தியில், அதிகம் ரசிகர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையிலான போட்டி எப்போது எந்தெந்த இடங்களில் நடைபெற போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

unknown node

ipl 2023 [Image Source : Google ]

கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலம் கொச்சியில் துவங்கி நடைபெற்றது. இந்த ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை சென்னை அணியும், சாம் கரனை,பஞ்சாப் அணியும், கேமரூன் க்ரீனை, மும்பை இந்தியன்ஸ் அணியும் வாங்கியது. மேலும் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.