சென்னை அணி அசத்தல் வெற்றி!புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை!

this news given information about chennai super kings win the match against punjab

கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணிக்கு  எதிரான போட்டியில்   சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி வெற்றி பெற்றுள்ளது.

18-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

unknown node

இதன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு அடித்து ஆடினார்கள்.அதிரடியாக விளையாடிய வாட்சன் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.இதன் பின்னர் டு பிளேஸிஸ் 54,ரெய்னா 17 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

unknown node

இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் அடித்தது.வாட்சன் 24 டு பிளேஸிஸ் 54,ரெய்னா 17 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.அதிரடியாக விளையாடிய தோனி 23 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார்.அதேபோல் ராயுடு 15 பந்துகளில் 21 ரன்கள் அடித்தார்.இதன் பின்னர் 161 ரன்கள் வெற்றி இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணி களமிறங்கியது.

unknown node

இதன் பின்னர் தொடக்கத்திலே பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.கெயில் 5,அகர்வால் 0 ரன்னில் வெளியேறினார்கள்.ஆனால் ராகுல் மற்றும் சர்பராஸ் ஜோடி நன்றாக விளையாடியது.ராகுல் அரைசதத்துடன் 55 ரன்களில் வெளியேறினார்.அதேபோல் சர்பராஸ் 67 ரன்களில் வெளியேறினார்.

பின் 20 ஓவர்கள் முடிவில் 5  விக்கெட்டை இழந்து  கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணி 138  ரன்கள் அடித்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் ஹர்பஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனால் சென்னை அணி விளையாடிய 5 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.