RRVCSK: தல தல தான்!த்ரில் வெற்றி பெற்றது சென்னை அணி

this news given information about Chennai Super Kings won by wickets

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை  அணி வெற்றி பெற்றுள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்ற  25-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது.இந்த போட்டி ஜெய்ப்பூரில்  நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி  பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில்  7 விக்கெட்டை இழந்து 151 ரன்கள் அடித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 28 ரன்கள் அடித்தார்.

இதன் பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.ஆரம்பமே சென்னை அணிக்கு அதிர்ச்சியாக அமைந்திருந்தது.தொடக்கத்திலேயே சென்னை அணி விக்கெட்டை இழந்து தடுமாறியது.வாட்ஸன் 0,டு பிளேஸிஸ் 7,ரெய்னா 4,ஜாதவ் 1 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

unknown node

இதன் பின்னர் ராயுடு மற்றும் தோனி ஜோடி சேர்ந்தனர்.அணியை சரிவில் இருந்து மீட்டனர்.இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20  ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 155  ரன்கள் அடித்தது.ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 2,உனட்கட்,ஆர்ச்சர்,குல்கர்னி தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.

களத்தில் சான்டனர் 10*,ஜடேஜா 9* ரன்களுடன் இருந்தனர்.தோனி 58, ராயுடு 57 ரன்கள் அடித்தனர். இதன் மூலம் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அணி வெற்றிபெற்றது.புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது சென்னை.