ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி இந்த மாதம் மார்ச் 29 ம் தேதி நடவிருப்பதாக இருந்தது .இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருவதால் ஐபிஎல் போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என்றும் , ஆனால் போட்டியை நிறுத்துவதற்கான உரிமை அமைப்பாளர்களிடமே உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் நேற்று கூறியிருந்தது.
unknown nodeகொரோனா வைரஸால் ஏப்ரல் 15 வரை அனைத்து வெளிநாட்டு விசாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது .இதனால் ஐபிஎல்லில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு இந்த விசா தடை பொருந்தும்.இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.