#IPL2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 158 ரன்கள் இலக்கு!

இன்றுநடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158

இன்றுநடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 70-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி பிரியம் கர்க் – அபிஷேக் சர்மா களமிறங்கினார்கள். இதில் 4 ரன்கள் அடித்து பிரியம் கர்க் தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி நிதானமாக ஆடி 20 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அவரைதொடர்ந்து களமிறங்கிய ஐடென் மார்க்கம் களமிறங்க, சிறப்பாக ஆடிவந்த அபிஷேக் சர்மா 43 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். 5 ரன்கள் எடுத்து நிகோலஸ் பூரண் வெளியேற, பின்னர் களமிறங்கிய ஷெப்பர்ட் அதிரடியாக ஆடி 26 ரன்கள் அடிக்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த வாஷிங்டன் சுந்தர் 25 ரன்கள் எடுத்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்யவுள்ளது.

#IPL2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 158 ரன்கள் இலக்கு!