சென்னை அணியையும் ,பயிற்சியாளரையும் இழிவாக பேசிய சஞ்சய் மஞ்சிரேக்கர் கொந்தளித்த ரசிகர்கள்

This news gives information about Sanjay Mukherkar's fans were scathing about the Chennai team and the coach

லீக் சுற்றில் வெற்றி பெற்று நேற்று முதல் தகுதி சுற்றில் மும்பை அணியும் , சென்னை அணியும் மோதி கொண்டனர்.இப்போட்டியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 132 ரன்கள் எடுத்து. வெற்றி பெற்று நேரடியாக இறுதி சுற்றுக்கு சென்றது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளராக இருக்கும் சஞ்சய் மஞ்சிரேக்கர்  சென்னை அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங்யிடம் பேட்டி எடுத்தார் .

அப்பேட்டியில் இந்தப் போட்டியில் எல்லா முடிவுகளையும் தோனி தான் எடுக்கிறார் என மக்கள் நினைப்பார்கள். ஆனால் இவர் தான் முடிவுகளை எடுத்திருக்கிறார் என பிளெமிங்கை பார்த்து கூறினார். இதனால் பிளெமிங் சற்று முகம் சுழித்த வாறு திரும்பினார்.

பின்னர் அவர் சென்னை அணியையும் அவர்களின் ஆட்டத்தை பற்றியும் இழிவாக பேசுவது போன்ற கேள்விகளை எழுப்பினர். இதனால் கொந்தளித்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு வர்ணனையாளராக  இருந்து கொண்டு மும்பை அணிக்கு ஆதரவாக பேசுவது தவறு என விமர்ச்சனம் செய்து வருகின்றனர்.