ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, அடுத்த சீசனுக்காக காத்திருக்கிறேன் என கூறிய வாட்சன் !

This news gives information about Watson said, thanking fans and waiting for the next season!

ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை அணியும்-சென்னை அணியும் மோதியது. இப்போட்டியில் இறுதியாக  மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரரான வாட்சன் முழங்காலில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய வெற்றிக்காக போராடினார். தான் அடிபட்டதை சிறிதும் கூட பொருட்படுத்தாமல் விளையாடிய வாட்சனுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

unknown node

இந்நிலையில் வாட்சன் கடந்த சில நாட்களாக தனக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளையும், அன்பையும் வெளிப்படுத்தும் அனைத்து ரசிகர்களுக்கும் தனது இன்ஸ்டாகிராமில்  வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

https://media.dinasuvadu.com/uploads/2019/05/60331815_360601744588154_3227194492993929216_n-1.mp4

அந்த வீடியோவில் வாட்சன் ,ஐபிஎல் இறுதி போட்டியில் வெற்றி கோட்டிற்கு அருகில் சென்று தோல்வி அடைந்தது அருமையான போட்டியாக அமைந்தது.மேலும் அடுத்த சீசனில் எனது பங்களிப்பை ஒரு படி அதிகமாக இருக்கும் என நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன்.மேலும் இறுதியாக வாட்சன்  “விசில்போடு”என கூறி முடித்து உள்ளார்.