மிதுன ராசிக்காரர்களே இந்த வாரம் எப்படி ?

By

மிதுன ராசிக்காரர்களே!
இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும். வசதிகள்  பெருகும். ராசிநாதன் சஞ்சாரம் சுகத்தையும் சவுக்கியத்தையும் தரும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட காலப் பிரச்சினைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை குரு தருவார். உடல் ஆரோக்கியம் பெறும். மன இறுக்கம் நீங்கும். குடும்பத்திலிருந்த சின்னச் சின்னப் பிரச்சினைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.
தனஸ்தானத்திலிருக்கும் ராகுவால் தடைபட்ட பணம் கைக்கு வந்து சேரும். மரியாதையும், அந்தஸ்தும் உயரும். உத்தியோகம் தொடர்பான  பிரச்சினைகள் தீரும். பெண்களின் ஆலோசனைக்கு மரியாதை ஏற்படும். கலைத்துறையினருக்கு மனதில் உறுதி ஏற்படும். அரசியல்வாதிகளின் வார்த்தைக்கு மற்றவர்களிடம் மதிப்பு இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். மாணவர்கள் எதையும் சற்று கவனமாகச் செய்ய வேண்டும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும்.  வாகனத்தில் செல்லும் போதும், விளையாட்டின் போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: பச்சை, சிவப்பு | எண்கள்: 3, 5
பரிகாரம்: பெருமாளையும், தாயாரையும் சனிக்கிழமை அன்று வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும்.
source: dinasuvadu.com

Dinasuvadu Media @2023