புரட்டாசி மாதத்தில் திருவதிகையில் பிரசித்திபெற்ற சரநாராயண பெருமாள் ஏக தின பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் ஏக தின பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்த தினத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பெறும் அனைத்து சேவை நிகழ்ச்சியும், சரநாராயண பெருமாள் கோவிலில் நடைபெறும் என்பது சிறப்பாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஏக தின பிரம்மோற்சவம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவரான சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் சரநாராயண பெருமாள், திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கண்ட பக்தரள் கோவிந்தா கரகோஷத்தை எழுப்பினர்.
DINASUVADU