அதிக வட்டி தருவதாக கூறி 10,000 பேரிடம் சுமார் 800 கோடி ருபாய் மோசடி செய்த நிதி நிறுவன மோசடி வழக்கில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வண்டலூரை சேர்ந்த சௌந்தர்ராஜன் மற்றும் அவரது மகன் அலெக்சாண்டர் ஆகியோர் ஹிஜாவு அசோசியேட்ஸ் எனும் நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதவட்டி அதிகமாக தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளனர்.
unknown node800 கோடி ரூபாய் :இதனை நம்பி தமிழக முழுவதிலும் இருந்து சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். இதில் 800 கோடி ரூபாய் வரை இவர்களிடம் பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர். இந்த பணத்தை வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக மோசடி செய்து உள்ளனர்.
மோசடி – சோதனை :இந்த குற்ற சம்பவம் தொடர்பாக கடந்த 2022 டிசம்பர் மாதம் நிதி நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களிலும், இயக்குனர்கள், நிர்வாக இயக்குனர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களில் என 32 இடங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
unknown nodeபெண்கள் கைது :இந்த குற்ற சம்பவத்தில் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய முக்கிய பொறுப்பில் இருக்கும் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் தற்போது மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த சாந்தி, விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்யாணி, அண்ணா நகர் பகுதியினை சேர்ந்த சுஜாதா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவர் மூலமாக மட்டுமே 2,835 முதலீட்டாளர்கள் 235 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.