தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,இன்றும்,நாளையும் தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
unknown nodeமேலும்,ஜூன் 22,23 ஆகிய தேதிகளில் வடதமிழகம்,கன்னியாகுமரி. திருநெல்வேலி,தென்காசி,தேனி,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை:
unknown nodeவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
unknown nodeஇன்று இலட்சத்தீவு பகுதி,கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்,கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்,குமரிக்கடல் பகுதி,மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும்,நாளை முதல் 3 நாட்களுக்கு கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
unknown node