சென்னையில் போலி போலீஸ்.. ரூ.1.5 கோடி கொள்ளை.! பலே திருடர்களை பிடிக்க தனிப்படை.!

சென்னை, சவுகார்பேட்டை அருகில் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ஒரு கும்பல் தங்களை  போலீஸ் என பொய் கூறி 1.40 கோடி ரூபாயை வழிப்பறி செய்துள்ளனர்.

சென்னை, சவுகார்பேட்டை அருகில் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ஒரு கும்பல் தங்களை  போலீஸ் என பொய் கூறி 1.40 கோடி ரூபாயை வழிப்பறி செய்துள்ளனர்.

சென்னை சௌகார்பேட்டையில் நகைகள் மொத்தமாக வாங்குவதற்கு வெளிமாநில வியபாரிகள்  வருவது வழக்கமான ஒன்று. அப்படி தான் வழக்கமாக ஆந்திராவில் இருந்து வரும் சுப்பாராவ் எனும் நகை வியாபாரி அண்மையில், தனது மேலாளர் ரகுமான் என்பவருடன் நகை வாங்க சென்னை வந்துள்ளார் .

சென்னை, சவுகார்பேட்டையில் நகை வாங்க 1 கோடியே 40 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு சுப்பாராவ் மற்றும் ரகுமான் வந்துள்ளனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்ம கும்பல், தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு வாகனத்தை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவர்களிடம் இருந்த 1 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை அவர்கள் கைப்பற்றியுள்ளார். அவர்கள் சென்ற பிறகு தான் இது வழிப்பறி சம்பவம், காவலர்கள் என பொய் கூறி தங்களை ஒரு கும்பல் ஏமாற்றியுள்ளனர் என்பது சுப்பாராவ் மற்றும் ரகுமான் ஆகியோருக்கு தெரிந்துள்ளது.

உடனடியாக, இருவரும் யானைக்கவுனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை வைத்து  இணை ஆணையர் ரம்யா பாரதி உத்தரவின் பெயரில் யானைக்கவுனி காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.