மாணவி அஸ்வினி கொலைவழக்கு: துணை ஆணையரிடம் துருவித்துருவி கேள்வி கேட்ட போலி நிருபர் கைது...!!

former lover Aayesan was killed by student Asvini at private college in KKNagar, Chennai. The Additional District Commissioner of Southern Region and T.Nagar Assistant Commissioner Arvindan were investigating the incident. When a journalist asked the deputy commissioner Aravindan how this could happen, what the police did, and what was the question of what was the protection of women. When she questioned the behavior of the person the he said something a press name. The journalists who said that the of such a newspaper did not come to him. Later, when the police brought him to the station, he was seen as a fake reporter. Then the police arrested him.

சென்னை கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவி அஸ்வினியை அவரது முன்னாள் காதலர் அழகேசன் கொலை செய்தார். தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் தரப்பில் இருந்து ஒரு நபர் மட்டும் காவல்துறை துணை ஆணையர் அரவிந்தனிடம் எப்படி இப்படி நடக்கலாம், போலீஸ் என்ன செய்கிறது, பெண்களுக்கு என்ன பாதுகாப்பு என்று கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார்.

unknown node

அந்த நபரின் நடத்தையைப் பார்த்து சந்தேகமடைந்த போலீசார்,பின்னர் விசாரித்த போது அவர் ஏதோ ஒரு பெயரே தெரியாத பத்திரிக்கையின் பெயரை கூறினார்.

அப்படி ஒரு பத்திரிகையே இதுவரையில் வெளி வரவில்லை என்று கூறிய பிற செய்தியாளர்கள் இவரை விசாரியுங்கள் என்று காவல்துறையினரிடம் கூறினர். பின்னர் காவல்துறையினர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது அவர் போலி நிருபர் என தெரிந்தது. பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர்.