86-வது முறையாக விழுந்த கண்ணாடி சென்னை விமான நிலையத்தில்!!!!

This news gives information about At Chennai airport at 86th time-86vathu muraiyaka uluntha kannadi chennai vimanam nilaiyam

சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மேற்கூரை இடிந்து விழுவது வழக்கமாகி விட்டது.

உள்நாட்டு முனையத்தின் நான்காவது நுழைவு வாயிலின் மேற்கூரை பகுதியில் இருந்து கண்ணாடி விழுந்தது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மேற்கூரை இடிந்து விழுவது வழக்கமாகி விட்டது.கண்ணாடி உடைந்து விழும் எண்ணிக்கை நூரை தொட்டு விடும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் உள்நாட்டு முனையத்தின் நான்காவது நுழைவு வாயிலின் மேற்கூரை பகுதியில் இருந்து கண்ணாடி விழுந்தது.

சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து விரைந்து வந்த  விமான நிலைய அதிகாரிகள் உடைந்த கண்ணாடி துண்டுகளை அகற்றினார்கள்.

சம்பவம் நடந்த இடத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து இருந்து  தவிர்க்கப்பட்டது.மேலும் விமான நிலைய அதிகாரிகள் கண்ணாடி விழுந்தது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.