அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி கொடூர பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
unknown nodeசென்னையைச் சிறுமி மாற்றித்திறனாளி இந்த பிஞ்சை அதே பகுதியை சேர்ந்த பாதுகாவலர்கள் என்று கூறப்படுகிற செக்யூரிட்டிகள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததது.இதன் பேரில் 17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
unknown nodeஅவர்கள் அனைவரும் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. குற்றம்சாட்டப்பட்ட இந்த 17 பேரும் செவ்வாயன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப் பட்டது.
unknown node17 பேரில் 14 பேருக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை.ஆகவே அவர்களுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.மற்ற 3 பேருக்கும் சொந்த வழக்கறிஞர்கள் ஆஜராகினர். குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 13-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை சமூக ஆர்வலர்களும், பெண்கள் அமைப்பும்,மக்களும் உற்று நோக்கி வருகின்றனர்.
DINASUVADU