#BREAKING: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு!

Chennai Metro management has announced that the Chennai Metro train services will run till 12 midnight.

சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.

சென்னையில் கனமழையால் மெட்ரோ ரயில் சேவை 1 மணிநேரம் நீட்டிக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக இரவு 11 மணி வரை மட்டுமே இயக்கப்படும் ரயில்கள், மழை காரணமாக பயணிகளின் தேவை கருதி நள்ளிரவு 12 மணி வரை இயக்கம்.

சாலைகளில் மழைநீர் தேங்குவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மெட்ரோ சேவை நீட்டிக்கப்ட்டுள்ளது. மேலும், பயணிகள் அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு பாதுகாப்பான இடங்களை அடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிவதை கடைபிடிக்குமாறு மெட்ரோ நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

unknown node