சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள போர் கப்பல்களை...!!! காண பொதுமக்கள் ஆர்வம்..!!!

சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள  இந்திய  போர்க் கப்பல்களை பார்வையிட இன்றும்  பொதுமக்கள்  கூட்டம் அலைமோதுகிறது. திருவிடந்தை ராணுவ கண்காட்சியை

சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள  இந்திய  போர்க் கப்பல்களை பார்வையிட இன்றும்  பொதுமக்கள்  கூட்டம் அலைமோதுகிறது. திருவிடந்தை ராணுவ கண்காட்சியை ஒட்டி, சென்னை  துறைமுகத்தில்  சுமித்ரா, ஷயாத்ரி, கமோர்டா, ஐராவத், குக்ரி ஆகிய 5 போர் கப்பல்கள்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்களை பொதுமக்கள் பார்வையிட இன்றே கடைசி நாளாகும். எனவே கப்பல்களை பார்வையிட பொதுமக்கள்  ஆர்வத்துடன்  திரண்டு வருகின்றனர்.

தீவுத்திடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஆதார் அட்டையை காண்பித்த பின்னர் சிறப்பு பேருந்துகள் மூலம் அனைவரும் துறைமுகத்துக்குள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் ஒரு நபர் ஒரு கப்பலை மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்