வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மழைநீர் வடிகால் இணைப்பு கொடுக்காமல் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, சுமார் 719 மின் மோட்டார்கள் தற்போதே அந்ததந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, மழைநீர் தேங்கும் பல்வேறு இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்குவதை தடுக்கவே, 4000 கோடியில் சென்னை மாநகரம் முழுவதும், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது இதன் பணிகள் பெரும்பாலும் முடிந்தாலும், இன்னும் பல்வேறு இடஙக்ளில் அதன் இணைப்பு கொடுக்காமல் இருக்கிறது.
அப்படி மழைநீர் வடிகால் இணைப்பு கொடுக்காமல் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, சுமார் 719 மின் மோட்டார்கள் தற்போதே அந்ததந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி தற்போது இருந்தே பருவமழையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.