#Breaking:நவ.17,18 இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Chennai Meteorological Department said Chennai will receive heavy rains tomorrow and the day after tomorrow.

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சேலம்,கள்ளக்குறிச்சி,திருச்சி,தஞ்சை,கடலூர்,நாமக்கல், ஈரோடு, தருமபுரி,அரியலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும்(நவ.17,18) மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே,நாளை சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறியிருந்த நிலையில்,தற்போது அந்த தகவலை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.