திருமணமாகி 24வது நாளில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி, இவரும் சென்னை ஆவடியை சேர்ந்த ராதா என்கிற இளம்பெண்ணும்  காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலிப்பது இருவீட்டாருக்கும்

சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி, இவரும் சென்னை ஆவடியை சேர்ந்த ராதா என்கிற இளம்பெண்ணும்  காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலிப்பது இருவீட்டாருக்கும் பிடிக்கவில்லை. பின்னர் பெற்றோர் சம்மதத்தை மீறி, இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.அதன் பிறகு பாலாஜியின் தந்தை இருவரிடமும் பேசியுள்ளார். அதாவது, பாலாஜியின் சகோதரி திருமணம் முடிந்த பிறகு இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்துவைத்து ஏற்றுக்கொள்கிறோம் என கூறியுள்ளார். அதுவரையில் ராதாவை அவர் பெற்றோர் வீட்டில் இருக்கும் படி கூறியுள்ளார்.

unknown node

மாமனாரின் பேச்சை ஏற்று ராதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு பாலாஜி ராதாவிடம் சரிவர பேசவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ராதா பாலாஜியின் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின்னர், ராதா தனது ரூமிற்க்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் இந்த  தற்கொலை  சம்பந்தமாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.