காதலியுடன் வந்து திருட்டு பைக்கில் செல்போன் பறித்த பலே காதலன்!

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த லிப்சா எனும் பெண் தனது தோழியுடன் நடந்து தேனாம்பேட்டையில் நடந்து செல்கையில் ஒரு திருடன் பல்சர் பைக்கில் வந்து லிப்சாவின் போனை

சென்னைதேனாம்பேட்டையை சேர்ந்த லிப்சா எனும் பெண் தனது தோழியுடன் நடந்து தேனாம்பேட்டையில் நடந்து செல்கையில் ஒரு திருடன் பல்சர் பைக்கில் வந்து லிப்சாவின் போனை திருடி சென்றான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.

unknown node

இந்த புகாரின் பேரில் சிசிடிவி கேமிராவை ஆராய்ந்த போலீசார், அந்த செல்போன் பறிப்பு சம்பவத்தில் உபயோகப்படுத்தியபல்சர் பைக்திருட்டு பைக் என தகவல் கிடைத்தது. பின்னர் அந்த பைக்கில் இன்னொருபெண்இருந்ததும் கண்டறியப்பட்டது. அந்த பெண் அத்திருடனின் காதலிஎன கண்டறியப்பட்டது.

unknown node

மேலும், அவர்கள்சைதாபேட்டைலாட்ஜில் தங்கியிருந்ததும் தெரிந்தது. பின்னர் சைதை சுற்றியுள்ளலாட்ஜில்தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது திருடன்ராஜுவும், அவனது காதலிஸ்வேதாவும் போலீசில் பிடிபட்டனர். ராஜு மீது ஏற்கனவே பலதிருட்டு புகார்கள்உள்ளதும் பின்னர் தெரியவந்தது. ஸ்வேதா கரூரை சேர்ந்தவர் என்பதும்சென்னை கல்லூரியில்பயின்று வருகிறார் என்ற தகவலும் கிடைத்தது.