#ChennaiRains : கடல் போல் காட்சியளிக்கும் மெரீனா கடற்கரையின் சுற்று வட்டாரம்.!

Due to the heavy rains in Chennai, the entire Marina beach area is surrounded by rain water and looks like the sea.

சென்னையில் பெய்து வரும் கனமழையால் மெரினா கடற்கரை பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது.

வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 90கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 150கிலோ மீட்டர் ,சென்னையில் இருந்து 220கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது . 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் , அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த அதிதீவிர புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் பட்சத்தில் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது.ஏற்கனவே சென்னை உட்பட பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது .எனவே பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.அந்த வகையில் சென்னையின் மெரினா கடற்கரை பகுதிகள் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது .சாலைகள் முழுவதும் வெள்ளம் கரை புரண்டோட மெரினா கடற்கரையின் இருபுறமும் கடல் போல் காட்சியளிக்கிறது .