ஹெர்னியா அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் பழனிச்சாமி!

Chief Minister Palanisamy, who was admitted to a private hospital in Chennai for hernia surgery, has been successfully discharged after undergoing surgery.

குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி அவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வெற்றிகரமாக முதல்வருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் பழனிசாமி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கொரோனா தொற்று இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அவர்கள் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் மூன்று நாட்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் முதல்வர் பழனிசாமி அவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.