என்னை தலைவனாக ஏற்றுக்கொண்டு பின்பற்றுங்கள் : நடிகர் சிவகுமார்

நடிகர் சிவகுமார் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து, அவருடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்ற ஒரு இளைஞரின் செல்போனை தட்டி விட்ட சம்பவம்

நடிகர் சிவகுமார் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து, அவருடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்ற ஒரு இளைஞரின் செல்போனை தட்டி விட்ட சம்பவம் அனைத்து இடங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.இந்நிலையில், இது குறித்து அவர் பேசுகையில், யாராயிருந்தாலும் அவர்கள் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்குக் சென்று புகைப்படம் எடுக்கலாம். மற்ற நபர்களுடன் புகைப்படம் எடுக்கும் போது அவர்களது அனுமதி பெற்று எடுக்க வேண்டும். என்னை தலைவனாக ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.