முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரம் குறித்து, வருமானவரித்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பெயரில் வெளிநாட்டில் சொத்துக்கள் ஏதேனும் உள்ளதா ? என வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.